சோளம்

Sorghum
மானாவாரி சோளம்
பருவம்
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை ஒட்டி விதைப்பு செய்யலாம். சராசரி மழையளவு மி.மீட்டர் உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பின்பும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்துமண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு போன்ற  முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
விதையும் விதைப்பும்
விதை அளவு : எக்டருக்கு 15 கிலோ
இடைவெளி : 45 ஒ 15 செ.மீ அல்லது 45 ஒ 10 செ.மீ
விதைநேர்த்தி
விதைகளைக் கடினப்படுத்துதல்
வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக் கடினப்படுத்தி பின்பு விதைக்கவேண்டும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் தன் எடைக்கு உலர்த்திய பின் விதைப்பதினால் பயிர் வறட்சி தாங்கி வளரும்.
நுண்ணுயிர் உரங்கள் விதைநேர்த்தி
ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 3 பொட்டலம் (600 கிராம்) அசோஸ்பைரில்லம் மேலும் 3 பொட்டலம் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் (1200 கிராம்) அசோபாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கிறது.
நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்) பாஸ்போ பாக்டீரியாவுடன் அல்லது 20 பொட்டலம் (4000 கிராம், எக்டர்) அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து தூவவேண்டும்.
விதைப்பு : விதைக்கும் பொழுது விதைகளை 15 கிராம் குளோரிபைரிபாஸ் உடன் 150 மில்லி ஒட்டும் பசை சேர்த்து நிழலில் உலரவைத்து பின்பு 5 செ.மீ ஆழத்தில் பரவ மழைக்கு முன்பு விதைக்கவேண்டும்.
முன்பருவ விதைப்பு : மழை ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு விதைப்பது தான் முன்பருவ விதைப்பு, விதைகளைக் கடினப்படுத்தி 5 செ.மீ ஆழத்தில் விதைக்கவேண்டும். அந்தந்த மாவட்டங்களில் மழை ஆரம்பத்தைப் பொறுத்து விதைக்கும் தருணம் வேறுபடும். உதாரணமாக கோயமுத்தூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் செப்டம்பர் 2ம் வாரம் முதல் 3ம் வாரத்தில் துவங்கும். ஆகவே இங்கு 2 அல்லது 3ம் வாரத்தில் முன்பருவ விதைப்பு செய்யலாம். மற்ற மாவட்டங்களுக்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம்சரியான தருணம்
ஈரோடு, கோவை.செப்டம்பர் 3ம் வாரம்
சிவகங்கைஅக்டோபர் முதல் வாரம்
இராமநாதபுரம்அக்டோபர் முதல் வாரம்
தூத்துக்குடிசெப்டம்பர் கடைசி வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம்
வேலூர், திருவண்ணாமலைசெப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் செப்டம்பர் மூன்றாம் வாரம்.
சோளப் பயிருடன் இணை வரிசையில் பயறு வகைகளைப் பயிர் செய்தால் உபயரி வருமானம் கிடைப்பதோடு மண்வளத்தையும் கூட்டமுடியும்.
ஒருங்கியைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உர நிர்வாகம்: ஒர எக்டருக்கு 12.5 டன்கள் மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும். இராசயன உரங்களை மண்பரிசோதனை சிபாரிசிபடி  இடவேண்டும். அல்லது பொதுப்பரிந்துரைப்படி எக்டருக்கு 40 20 0 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
களை நிர்வாகம் : சோளப்பயிர் முளைவிட்ட இரண்டாம் வாரம் முதைல் 5ம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருந்தினை விதைத்த 3-5 நாட்களுக்குள் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப் பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் எக்டருக்கு 2 லிட்டர் பெண்டிமிதிலின் தெளிக்கவேண்டும்.
மறுதாம்பு சோளம்
மறுதாம்புப் பயிர் சாகுபடியில் கவனத்தில் இருக்கவேண்டியவை.
  • நடவுப் பயிரை அறுவடை செய்யும் போது நில மட்டத்தில் இருந்து 15 செ.மீ தட்டையை விட்டு அறுத்து உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.
  • அறுவடை செய்தவுடன் களை எடுக்கவேண்டும். பின் 15 மற்றும் 30ம் நாள் ஒரு களை எடுக்கவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்தை  இரண்டாகப் பிரித்து 50 கிலோ மணிச்சத்துடன் மறுதாம்புப் பயிராக விட்ட 15வது நாளில் இடவேண்டும். மீதம் உள்ள தழைச்சத்தை 45வது நாளில் இடவேண்டும்.
  • மண் மற்றும் கால நிலையைப் பொறுத்து நீர் பாய்ச்சவேண்டும். மறுதாம்புப் பயிராக விட்ட 70-80வது நாளில் நீர்ப்பாசனத்தை உடனடியாக நிறுத்திவிடவேண்டும்.
  • பூச்சி நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பு : மருதாம்புப் பயிரின் வயது நடவு பயிரை விட 15 நாட்கள் குறைவாக இருக்கும்.
பயிர் மேலாண்மை
கம்பு மானாவாரியிலும் இறவையிலும் செம்மண், குறுமண், இருமண் நிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
1. நாற்றாங்கால்
நிலம் தயாரித்தல்
ஒரு எக்டர் நடவு செய்ய 7.5 சென்ட் நாற்றாங்கால் தேவைப்படும். நாற்றாங்கால் நிலத்தை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் நிலத்தை தயார் செய்யவேண்டும்.
தொழுஉரம் இடுதல்
நன்கு மக்கிய தொழு உரம் 750 கிலோவை நிலத்தில் இட்டு நன்கு உழவேண்டும். நாற்றாங்காலில் விதைத்தபிறகு 500 கிலோ மட்சிய தொழு உரம் கொண்டு விதையை மூடிவிடவேண்டும்.
மேட்டுப்பாத்தி அமைத்தல்
ஒவ்வொரு பாத்தியும் 3 மீட்டர் 1.5 மீட்டர் அளவுள்ளதாக அமைத்து இடையில்  30 செ.மீ அகலமுள்ள வாய்க்கால்கள் இடையிலும், பாத்தியை சுற்றியும் வருமாறு அமைத்தல் வேண்டும். வாய்க்கால்கள் 15 செ.மீ ஆழமுள்ளதாக இருக்கவேண்டும்.
விதைநேர்த்தி
நாற்றாங்காலில் விதைப்பதற்கு முன் 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (600 கிராம், எக்டர்) மற்றும் 3 பொட்டலம் பாஸ்போபேக்டீரியா (600 கிராம், எக்டர்) அல்லது 6 பொட்டலம் அசோபாஸ் (1200 கிராம், எக்டர்) கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும்.
நாற்றாங்கால் விதைப்பு
மேட்டுப்பாத்திகளில் 3.75 கிலோ விதையை 7.5 சென்ட் நாற்றாங்காலில் அதிக ஆழமில்லாமல் விதைக்கவேண்டும். குருத்து ஈ அதிக பாதிப்புள்ள பகுதிகளில் 12.5 கிலோ விதையை விதைத்து ஆரோக்கியமான நாற்றுக்களை தேர்வு செய்து நடவேண்டும். விதைத்த பிறகு 500 கிலோ தொழு உரம் விதைகளை மூடவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,7,12,17ம் நாள் நீர் கட்ட வேண்டுதல் அவசியம். களிமண் பாங்கான பூமிக்கு விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,9,16 ஆம் நாள் நீர் பாய்ச்சினால் போதுமானதாகும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு இருமுறையும், நாட்டுக்கலப்பைக் கொண்டு இருமுறையும் உழுது கட்டிகள் இல்லாமல் தயார் செய்யவேண்டும். 12.5 டன், எக்டர் பரப்பவேண்டும். அதை நாட்டு கலப்பையைக் கொண்டு உழவேண்டும் மற்றும் 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (2000 கிராம். எக்டர்) மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்.எக்டர்) பாஸ்போபேக்டீரியா அல்லது 20 பொட்டலம் அசோபாஸ் (4000 கிராம். எக்டர்) கலந்து மண்ணில் இடவேண்டும்.
பார், பாத்தி அமைத்தல்
45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். அல்லது நீர் அளவை பொறுத்து 10 அல்லது 30 சதுர மீட்டர் பாத்திகள் அமைக்கவேண்டும்.
பார், பாத்தி அமைத்தல்
உரமும் உரமிடுதலும்

பயிரிடும் முறை
தொழு உரம் ( டன்)கிலோ எக்டர்இடவேண்டிய காலம்
1. மானாவாரி12.54020-அனைத்தும் அடியுரமாக இடவும்.
2. இறவை12.5703535நான்கில் ஒரு பாகம் தழைச்சத்தையும், முழு அளவு மணிச்சத்தையும் சாம்பல் சத்தையும் அடியுரமாக இடவேண்டும். நான்கில்  இரண்டு பாகம் தழைச்சத்தை விதைத்த 15 ஆம் நாள் மேலுரமாக இடவேண்டும். மீதமுள்ள தழைச்சத்தை (நான்கில் ஒரு பாகம்) விதைத்த 30ம் நாள் மேலுரமாக இடவேண்டும்.
நாற்று நடவு செய்தல்
15 முதல் 18 நாட்கள் வயதுள்ள நாற்றுக்களை குத்துக்கு ஒரு நாற்று வீதம், 45 செ.மீ ஒ 15 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்யவேண்டும். 5 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (1000 கிராம். எக்டர்) மற்றும் 5 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா (1000 கிராம்.எக்டர்) அல்லது 10 பொட்டலம் அசோபாஸ் (2000 கிராம்.எக்டர்) 40 லிட்டர் தண்ணீருடன் அரிசிக் கஞ்சியும் கலந்து அதில் நாற்றுக்களின் வேர்ப்பாகத்தினை 15-30 நிமிடங்கள் நனைத்து பிறகு நடவேண்டும்.
நேரடி விதைப்பு
விதைப்பதற்கு முன் விதைகளை 2 சதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதம் சோடியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைப்பதால் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. விதைகளை 45 செ.மீ ஒ 15 செ.மீ இடைவெளியில் ஒரு எக்டருக்கு 5 கிலோ என்ற அளவில் விதைக்கவேண்டும். குருத்து ஈ அதிக பாதிப்புள்ள பகுதிகளில் அதிக விதை அளவாக 12.5 கிலோ, எக்டர் என்ற அளவில் விதைத்து பயிர் கலைப்பின் போது குருத்து ஈ பாதிக்கப்பட்ட நாற்றுக்களை அகற்றவேண்டும்.
களை நிர்வாகம்
விதைத்த நடவு  செய்த 3ஆம் நாளில் அட்ரசின் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 500 கிராம் என்ற அளவில் 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கவும். பிறகு 30-35வது நாளில் கை களையெடுக்கவேண்டும். களைக்கொல்லி உபயோகிக்கவிட்டால் விதைத்த, நடவு செய்த 15வது மற்றும் 30-35 நாட்களில் கைக்களை எடுக்கவேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு வயல்
நேரடி விதைப்பு
மணற்பாங்கான நிலம்
முதல் நாள்
முதல் நாள்
4வது நாள்
4வது நாள்
15வது நாள்
17வது நாள்
28வது நாள்
30வது நாள்
40வது நாள்
42வது நாள்
52வது நாள்
55வது நாள்
65வது நாள்
68வது நாள்
77வது நாள்
79வது நாள்
மொத்தம்
8 முறை
8 முறை
களிமண் நிலம்
முதல் நாள்
முதல் நாள்
4வது நாள்
5வது நாள்
15வது நாள்
17வது நாள்
28வது நாள்
30வது நாள்
42வது நாள்
45வது நாள்
54வது நாள்57வது நாள்
66வது நாள்70வது நாள்
7 முறை7 முறை
மண்குறிப்பு : பருவகால தட்பவெப்பநிலையைப் பொறுத்து நீர் நிர்வாகம் மாறும்.
பயிர் அறுவடை
அறுவடைக்கான அறிகுறிகள்
  1. இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தத் தரும்.
  2. தானியங்கள் கடினமாகும்.
அறுவடை
  1. கதிர்களை தனியாக அறுவடை செய்யவும்.
  2. தட்டை ஒரு வாரம் கழித்து வெட்டி நன்கு காயவைத்தபின் சேமித்து வைக்கவும்.
தானியங்களை கதிரில் இருந்து பிரித்தல் மற்றும் தரம் பிரித்தல்
  1. கதிர்களை காயவைக்கவும்.
  2. விசைக் கதிரடிப்பான் கொண்டு விதைகளைப் பிரிக்கலாம் அல்லது கதிர்களைப் பரப்பி கல் உருளை அல்லது மாடுகளை செலுத்துவதன் மூலமும் பிரிக்கலாம்.
Tags: , , ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...