புழுதிவிதைத்த மேட்டுக்கால் நெல்


மேட்டுக்கால் நெல்
உற்பத்தி முறை
  • புழுதி விதைத்த மானாவாரி போன்றே எல்லா பக்குவமும் செய்யப்படவேண்டும்
ஏற்ற பகுதிகள்
  • தமிழகத்தில் மிகவும் சிறிதளவிலேதான் மேட்டுக்கால் நெல் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் கடற்கரைப்பகுதிகளில் கிடைக்கும் மழையை விட தொடர்ந்து மழைபெற வாய்ப்புள்ளது. தண்ணீரை நிலை நிறுத்த வரப்புகுள் அமைக்கப்படுவதில்லை. இப்பகுதிகளில் மண்ணில் ஈரம் தொடர்ந்து இருக்கலாம். ஆனால் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை. பயிரின் வளர்ச்சிக்கு அளிக்கப்படுகின்ற உரச் சத்துக்கள் மழையின் அளவைப் பொறுத்தே அமைகின்றது
பயிரின் மற்ற முறைகள்
  • பகுதி 4-ல் கூறப்பட்டது போன்றே
  • உரச்சத்துக்கள் பிரித்து அளிக்கப்படவேண்டும்
  • இலைவண்ண அட்டை யின் மூலம் தழைச்சத்து அளிக்ப்பட்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது
ஊடுபயிர்
  • தண்ணீர் தேங்காத நிலை இருப்பதால் உளுந்தை ஒவ்வொரு நான்கு நெல் வரிசைக்கு இடையில் ஊன்றி கூடுதலாய் ஊடுபயிரின் மகசூல் காணலாம்
மகசூல்
  • மகசூல் நீரின் அளவைப் பொறுத்தும் உரச்சத்துக்கள் அளிக்கப்பட்டதைப் பொறுத்தும் அமைகிறது.
பயிர்ப்பாதுகாப்பு
âச்சி மேலாண்மை
நாற்றங்கால்
ஒருஎக்டர் பரப்பில் நடவு செய்ய 800 ச.மீ. (20 சென்ட்) நாற்றங்கால் தேவையாகும். அதற்கு மருந்து தெளிக்க 40 லிட்டர் மருந்துக் கலவைத் தேவைப்படும்
âச்சி மேலாண்மை முறைகள்
âச்சிகள்மேலாண்மை முறைகள்
படைப்புழு
  • நாற்றங்காலில் தண்ணீரை வடிக்கவும்
  • கீழ்க்கண்ட âச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனம் ஒன்றினை மாலை நேரத்தில் தெளிக்கவும்
  • குளோர்பைரிபாஸ் 20இ.சி.80மி.லி.
  • என்டோசல்பான் 35இ.சி.80மி.லி.
இலைப்பேன்
  • அச்சிக்கணக்கெடுத்தல் நனைத்த உள்ளங்கையை இலைகளின் மீது 12 இடங்களில் தடவி எடுக்கவும். வீச்சுக்கு 60 க்கு மேல் இருந்தால் (அ) 10 சத நாற்றுகளில் மேலிரண்டு இலைகள் பாதி அளவு சுருண்டு காணப்பட்டால்,
  • கீழ்க்கண்ட âச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கவும்
பாஸ்பாமிடான்         40 எஸ்.எல். 50மி.லி.
மானோகரோட்டோபாஸ் 36எஸ்.எல்.  40 மி.லி.
என்டோசல்பான்         35இ.சி.   80மி.லி.
பச்சைத்தத்துப் âச்சி
  • நாற்றாங்காலில் தத்துப் âச்சிகளின் எண்ணிக்கை 25 வலை வீச்சுக்கு 60க்குமேல் காணப்பட்டால் (அ) 20 தத்துப் âச்சிகள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் காணப்பட்டால்,
  • கீழக்கண்ட âச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கவும்
பெனிட்ரோத்தியான்  50 இ.சி.    80 மி.லி.
பாஸ்பாமிடான்     40 எஸ்.எல.  50 மி.லி.
பென்தியான்       100 இ.சி.    40 மி.லி.
குயினால்பாஸ்       25 இ.சி.    80 மி.லி.
பாசலோன்          35 இ.சி.    120 மி.லி.
என்டோசல்பான்      35இ.சி.     80மி.லி.
மானோகுரோட்டோபாஸ் 36எஸ்.சி.  40மி.லி.
  • நாற்றங்காலில்2.5 செ.மீ. தண்ணீரைத் தேக்கி கீழக்க்கண்ட குருணை மருந்துகிளில் ஏதேனும் ஒன்றினை 20 சென்ட் பரப்ளவில் தூவவும்
  • கார்போபிäரான் 3 சத குருணை 3.5 கி.கி.
  • போரேட் 10 சத குருணை 1.0 கி.கி.
  • குயினால்பாஸ் 5 சத குருணை 2.0 கி.கி.
கூண்டுப்புழு
  • 250 மி.லி. மண்ணெண்ணெயைத் தண்ணீரில் கலக்கவும்
  • கூண்டுப்புழுக்களை உதிரவைக்க ஒரு கயிற்றினைப் பயிரின்மேல் இழுத்துப் பின்னர் தண்ணீரை வடிக்கவும்
  • கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும்
  • கீழ்க்ண்ட âச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கவும்
  • மானோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எல்.   40 மி.லி.
  • குயினால்பாஸ்           25 இ.சி.     80 மி.லி.


source:http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_cropproduction_cereals_rice_dryseededuplandrice_ta.html
Tags: , , ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...