எள்

Gingelly
பருவம் மற்றும் இரகங்கள்
அ. மானாவாரி
1.ஆடிப்பட்டம் (ஜூன் - ஜூலை ) அனைத்து மாவட்டங்களிலும்கோ 1 டி.எம்.வி 3
2.கார்த்திகைப் பட்டம் (அக்டோபர் - நவம்பர்) அனைத்து மாவட்டங்களிலும்கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 5, எஸ்.வி.பி.ஆர் 1.
ஆ.இறவை
1.மாசிப்பட்டம் (பிப்ரவரி - மார்ச்)
கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனீ, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.
டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 6, கோ.1, வி.ஆர்.ஐ (எஸ்.வி) 1, எஸ்.வி.பி.ஆர்.1
2.நெல் தரிசு
கடற்கரையோரப் பகுதிகள்வி.ஆர்.ஐ (எஸ்.வி) 1
எள் இரகங்கள்
பண்புகள்கோ 1டி.எம்.வி 3டி.எம்.வி 4டி.எம்.வி 5
பெற்றோர்(டி.எம்.வி 3 ஒ எஸ்.ஐ. 1878) ( எஸ்.ஐ 1878)தென் ஆற்காடு உள்ளூர் இரகம் ஒ மலபார்சாத்தூர் உள்ளூர் இரகத்தில் இருந்து தனிவழித் தேர்வுவைகுண்டம் இரகத்தில் இருந்து தனிவழித்தேர்வு
வயது (நாள்)85-9080-8585-9080-85
எண்ணெய் சத்து51515051
விளைச்சல் கிராம் எக்டர்
இறவை750-790625-750700-850-
மானாவாரி450-650400-650-450-650
செடி அமைப்புமையத்தண்டு நீண்ட கிளைகளையும், குறைந்த கணுவிடைப் பகுதிகளையும் கொண்டது.நன்கு கிளைத்த புதர் செடி போன்ற தோற்றத்தை உடையது.நன்கு கிளைத்த புதர் செடி போன்றது.நேரான, நடுத்தரமான கிளைகளைக் கொண்டது.
காய்கள்4 அறைகள்4 அறைகள்4 அறைகள்4 அறைகள்
விதைகள்கருப்புகரும்பழுப்புபழுப்புபழுப்பு

பண்புகள்டி.எம்.வி 6எஸ்.வி.பி.ஆர் 1வி.ஆர்.ஐ (எஸ்.வி)1
பெற்றோர்ஆந்திரப் பிரதேச இரகத்திலிருந்து தனிவழித் தேர்வுமேற்கு மலைத் தொடர் வெள்ளை இரகத் தேர்வுதிருக்காட்டுப்பள்ளி இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு
வயது (நாள்)85-9075-8070-75
விளைச்சல் கி.ஹெ
இறவை
700-950800650-900
மானாவாரி-600450-650
எண்ணெய் சத்து5453.851
செடி அமைப்புநேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது.நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது.நடுத்தர கிளைகளை உடையது.
காய்கள்4 அறைகள்4 அறைகள்4 அறைகள்
விதைகள்பழுப்புவெள்ளைபழுப்பு
நிலம் தயாரித்தல்
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அ) மூன்று முறை இரும்பு கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இரு, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூடவேண்டும்.
விதையும் விதைப்பும்
விதை அளவு எக்டருக்கு 5 கிலோ.
விதைநேர்த்தி
இரண்டு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவேண்டும். இதைப் பூஞ்சாண கொல்லியுடன் கலக்கக்கூடாது. 25 சத தழைச்சத்தானது 3 பாக் அசோஸ்பைரில்லம் (600 கிராம் . எக்டர்) மற்றும் 3 பாக் (600 கிராம்.எக்டர்) பாஸ்போபாக்டீரியம் அல்லது 6 பாக் அசோபாஸ் (1200 கிராம், எக்டர்) மூலம் விதை நேர்த்தி செய்யும் போது 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்.எக்டர்) மற்றும் 10 பாக் (2000 கிராம் .எக்டர்) பாஸ்போபாக்டீரியா அல்லது 20 பாக் அசோபாஸ் (400 கிராம்.எக்டர்) மண்ணில் இடுவதன் மூலம் சரி செய்யப்படுகின்றது.
விதைக்கும் முறை
ஐந்து கிலோ விதையுடன் 20 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத்தூவவேண்டும்.
இடைவெளி
விதைத்த 15 ஆம் நாள் செடிக்குச்செடி 15 செ.மீ இடைவெளிவிட்டு செடிகளை கலைத்துவிட வேண்டும். பின்பு 30ம் நாள் செடிக்கு செடி 1 அடி இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைத்து விடுவது சிறந்தது.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமும் உரமிடுதலும்
தொழு உரம்
மக்கிய தொழு உரம் கடைசி உழவிற்கு முன்பு இடவும்.
இராசயன உரம்
மண் பரிசோதனைப் பரிந்துரைப்படி உரைமிடுதல் சிறந்தது. அவ்வாறு செய்யாவிடில் பொதுவான பரிந்துரையின் படி கீழ்க்கண்டவாறு இடவும்.

பயிர்
ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை
மணி
சாம்பல்
எள்மானாவாரி
23
13
13
இறவை
35
23
23
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
விதைத்த 15 நாட்கள் கழித்து கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்துக் களைகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.
நீர் நிர்வாகம்
எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவ்றறைப் பொருத்து சுமார் 5 அல்லது 6 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். முதல் முறை விதை விதைத்தவுடன் 7வது நாள் உயிர்த் தண்ணீர், 25வது நாள் பூக்கும் தருவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் 2 முறையாக சுமார் 6 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். பூ பூக்கும் பருவம் காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இறவைப் பயிரில் விதைத்த 65 நாட்களுக்குப்பின் நீர்ப்பாய்ச்சக்கூடாது.
அறுவடைக்கான அறிகுறிகள்
  1. செடியில் கீழிலிருந்து 25 சத இலைகள் உதிர்ந்துவிடும்.
  2. காய்கள் மற்றும் தண்டுப்பாகங்கள் பழுப்பு நிறமாக மாறும்.
  3. செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10வது காயில் உள்ள விதைகள் கறுப்பாக (முதிர்வு) மாறியிருக்கும்.
மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்பொழுது அறுவடை செய்துவிடவேண்டும். தவறினால் காய்கள் வெடித்து சிதறி மகசூல் மிகவும் குறையும்.
Tags: , , ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...