உளுந்து

Blackgram
விதையின் அளவு
இரகங்கள்விதையின் அளவு (கிகி, எக்டர்)
டி 9, கோ 5, வம்பன் 1, வம்பன்2, டிஎம்வி 1
20
10
ஏடிடீ5, டிஎம்வி1 (நெல் தரிசு)
25
-

பயிர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,000, எக்டர்
பயிர் மேலாண்மை
நிலம் தயாரித்தல்
நில மேம்பாடு
நில மேம்பாட்டிற்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடவேண்டும்
விதையும் விதைப்பும்
Blackgram0001
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்யவும் அல்லது கார்பென்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்கவும். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்துவிதையுடன் கலக்கக் கூடாது. ட்ரைக்கோடெர்மா அல்லது கூடமோனாஸ் கலந்த விதையுடன் பயனுள்ள பாக்டீரியாக்களை கலந்து விதைக்கலாம்.
Blackgram0002
பாக்டீரியா ராசியுடன் விதைநேர்த்தி
தமிழ் நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் சி ஆர்.யு -7, 3 பாக்கேட் (600 கிராம், எக்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிவிக்கும் பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் (600 கிராம், எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம், எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும் விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசசோபியம் (2000 கிராம், எக்) ரூ.10 பாக்கெட் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் (2000 கிராம், எக்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம், எக்) உடன் 25 கி.கி தொழு உரம் மற்றும் 25 கி.கி.மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.
விதைப்பு
விதைகளை 30 ஒ 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவவேண்டும். தூவும் போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம் வரப்பு ஒரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமிடுதல்
விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 50 சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் எக்டருக்கு 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட்டை பூக்கும் தருணத்தில் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2  சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
பயிர்ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழைமணிசாம்பல்கந்தகம்
உளுந்துமானாவாரி12.52512.510
இறவை50502520
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர், மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் எல்லா நிலைளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
Blackgram0003
இலைவழி நுண்ணூட்டம்
டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றம் சலிசலிக் அமிலக் கரைசல் தெளித்தல்
இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சலிசலிக் அமிலம் 100 மில்லி  கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்
நெல் தரிசு பயறு வகைப்பயிற்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம்  பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்.
மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
எக்டருக்கு பெண்டிமெத்திலின் 20 லிட்டர் கைத்தெளிப்பான் மூலம் 500 லிட்டர் தண்ணீருடன் விதைத்த மூன்றாவது நாள் தெளிக்கவேண்டும். இதன் மூலம் விதைத்திலிருந்து 30 நாட்களுக்குள் களைகளைக்கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் கைகளை ஒரு முறை கைகளை மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

விதை அளவு
வகைகள்விதையளவு (கிலோ, எக்டர்)
தனிப்பயிர்கலப்புப்பயிர்
பையூர்1, வம்பன்1. வம்பன்2 கோ6 மற்றும் கோ(சிபி)725 கிலோ12.5 கிலோ
பயிர் மேலாண்மை
நிலம் தயாரித்தல்
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் அல்லது திரம் 4 கிராம் அல்லது டிரைகோடாமா பிரிவு 4 கிராம் அல்லது 1 கிராம் சூடோமோனஸ் உடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைநேர்த்தி செய்யவேண்டும்
பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மீண்டும் பாக்டீரியாவுடன் நேர்த்தி செய்யப்படுவதற்கு 24 மணி நேர இடைவேளை வேண்டும்.
ஊடீஊ 10 எனும் மேம்படுத்தப்பட்ட ரைசோபிய ராசி விளைச்சளை அதிகரிக்க உகந்ததாகும்
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட, 3 பாக்கெட் (600 கிராம், எக்) ரைசோபியம் ஊடீஊ 10 மற்றும் 3 பாக்கெட் (600 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியாவை அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லையென்றால், 10 பாக்கெட் ரைசோபியவுடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்யவேண்டும். அரிசிக் கஞ்சியானது ஒட்டும் திரவமாகப்பயன்படுகிறது. நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும்.
கடின விதை நேர்த்தி: தட்டைப்பயிர் விதைகளை மூன்றுக்கு ஒன்று அளவில் 100 பிபிஎம் (10 கிராம், 100, லிட்டர் தண்ணீர்) நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசலில் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.
விதைத்தல்: விதைகளை கீழ்க்காணும் இடைவெளியில் ஊன்றுதல் வேண்டும்
இரகங்கள்தனிப்பயிர்கலப்புப்பயிர்
கோ 6, வம்பன் 130 செ.மீ. ஒ 15200 செ.மீ.ஒ15
செ.மீ.செ.மீ.
கோ(சிபி) 7, வம்பன்245 செ.மீ. ஒ 15 செ.மீ.-
பையூர் 130 செ.மீ. ஒ 15 செ.மீ.-
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமிடுதல்
அடியுரமாக மானாாவாரிப் பயிருக்கு எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும்
இறவைப் பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து அளிக்க வேண்டும்.அடியுரமாக 25 கிலோ ஜிங்க்சல்பேட் இட வேண்டும்.
பயிர்ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழைமணிசாம்பல்கந்தகம்
தட்டைப்பயிர்மானாவாரி12.52512.510
இறவை25502520
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின் மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவ நிலைகளைப் பொறுத்து 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் நீர் கட்ட வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து தினமும் நீர் ஊற்ற வேண்டும். பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் நீ்ாகட்ட வேண்டிய முக்கிய நிலைகளாகும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
இறவைப் பயிருக்கு ஒரு எக்டருக்கு பெண்டிமித்திலின் 2.0 லிட்டர் என்ற அளவில் விதைத்த மூன்று நாட்களுக்குப்பின் தெளிக்க வேண்டும். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 15 மற்றும் 30வது நாட்களில் இரண்டு கைக்களை எடுக்க வேண்டும்.
Tags: , , ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...