தட்டைப்பயிர்

Cowpea
விதை அளவு
வகைகள்விதையளவு (கிலோ, எக்டர்)
தனிப்பயிர்கலப்புப்பயிர்
பையூர்1, வம்பன்1. வம்பன்2 கோ6 மற்றும் கோ(சிபி)725 கிலோ12.5 கிலோ
பயிர் மேலாண்மை
நிலம் தயாரித்தல்
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் அல்லது திரம் 4 கிராம் அல்லது டிரைகோடாமா பிரிவு 4 கிராம் அல்லது 1 கிராம் சூடோமோனஸ் உடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைநேர்த்தி செய்யவேண்டும்
பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மீண்டும் பாக்டீரியாவுடன் நேர்த்தி செய்யப்படுவதற்கு 24 மணி நேர இடைவேளை வேண்டும்.
ஊடீஊ 10 எனும் மேம்படுத்தப்பட்ட ரைசோபிய ராசி விளைச்சளை அதிகரிக்க உகந்ததாகும்
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட, 3 பாக்கெட் (600 கிராம், எக்) ரைசோபியம் ஊடீஊ 10 மற்றும் 3 பாக்கெட் (600 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியாவை அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லையென்றால், 10 பாக்கெட் ரைசோபியவுடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்யவேண்டும். அரிசிக் கஞ்சியானது ஒட்டும் திரவமாகப்பயன்படுகிறது. நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும்.
கடின விதை நேர்த்தி: தட்டைப்பயிர் விதைகளை மூன்றுக்கு ஒன்று அளவில் 100 பிபிஎம் (10 கிராம், 100, லிட்டர் தண்ணீர்) நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசலில் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.
விதைத்தல்: விதைகளை கீழ்க்காணும் இடைவெளியில் ஊன்றுதல் வேண்டும்
இரகங்கள்தனிப்பயிர்கலப்புப்பயிர்
கோ 6, வம்பன் 130 செ.மீ. ஒ 15200 செ.மீ.ஒ15
செ.மீ.செ.மீ.
கோ(சிபி) 7, வம்பன்245 செ.மீ. ஒ 15 செ.மீ.-
பையூர் 130 செ.மீ. ஒ 15 செ.மீ.-
Cowpea0002
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமிடுதல்
அடியுரமாக மானாாவாரிப் பயிருக்கு எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும்
இறவைப் பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து அளிக்க வேண்டும்.அடியுரமாக 25 கிலோ ஜிங்க்சல்பேட் இட வேண்டும்.
பயிர்ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழைமணிசாம்பல்கந்தகம்
தட்டைப்பயிர்மானாவாரி12.52512.510
இறவை25502520
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின் மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவ நிலைகளைப் பொறுத்து 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் நீர் கட்ட வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து தினமும் நீர் ஊற்ற வேண்டும். பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் நீ்ாகட்ட வேண்டிய முக்கிய நிலைகளாகும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
இறவைப் பயிருக்கு ஒரு எக்டருக்கு பெண்டிமித்திலின் 2.0 லிட்டர் என்ற அளவில் விதைத்த மூன்று நாட்களுக்குப்பின் தெளிக்க வேண்டும். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 15 மற்றும் 30வது நாட்களில் இரண்டு கைக்களை எடுக்க வேண்டும்.
Tags: , , ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...