பச்சைப் பயிறு


Green Gram
விதை அளவு
விபரங்கள்விதை அளவு (கிலோ,எக்டர்)
தனிப்பயிர்கலப்புப்பயிர்
அனைத்து இரகங்களும்2010
நெல் தரிசு எடிடீ 225-
பயிர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,000 எக்டர்
பயிர் மேலாண்மை
நிலம் தயாரித்தல்
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும். மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மனண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்
விதையும் விதைப்பும்
விதை அளவு
இரகங்கள்விதை அளவு (கிலோ,எக்டர்)
தனிப்பயிர்கலப்புப்பயிர்
எல்லா இரகங்களுக்கும்2010
நெல் தரிசில் -  எடிடி 230-
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்டிபன்டாசிம் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிவு அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைப்பு நஞ்சையில் விதைகளை 30 ஒ 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் விதைகளை நெல் அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும்போது சீராக நிலத்தில் தெளிக்க வேண்டும். அப்போது வயலில் தகுந்த ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாக்டீரியா ராசியுடன் விதை நேர்த்தி
தமிழ் நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் சி.ஆர்.எம் – 6, 3 பாக்கெட் (600 கிராம், எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம், எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம்,எக) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம், எக்) உடன் 25 கி.கி.தொழு உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
மானாவாரிப்பயிர் 12.5 கிலோ தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து இடவேண்டும். இறவைப்பயிர் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து  தரக்கூடிய உரங்களை இட வேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.
பயிர்ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழைமணிசாம்பல்கந்தகம்
பச்சைப்பயிறுமானாவாரி12.52512.510
இறவை25502520
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.
நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். 10-15 நாட்களுக்கு ஒருமுறை மண் மற்றும் கால நிலைகளுக்கு ஏற்றவாறு) தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரதம் கழித்து பானை மூலம் பாசனம் செய்ய வேண்டும். பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் நீர் பாசனம் மிக முக்கியமானதாகும். எல்லா பருவங்களிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
இலைவழி நுண்ணூட்டம்
டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சலிசலிக் அமிலக் கரைசல் தெளித்தல்
இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீர்ல் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் கலிகலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்
நெல் தரிசு பயறு வகைப்பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
ஒரு எக்டருக்கு பென்டிமெத்தலின் 2 லிட்டருடன் 500 லிட்டர் தண்ணீர் கலந்து விதைத்த மூன்று நாட்களுக்கு பின் தெளிக்கவேண்டும். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை
காய்கள் 80 சதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுத்து கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, கையினாலோ அல்லது இயந்திரங்களை வைத்து மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.
Tags: , , ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...