தமிழகத்தில் விவசாய கூலியாட்கள் பிரச்னைக்கு கேரளா திட்டத்தால் தீர்வு

தமிழகத்தில், விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், கேரளாவில் செயல்பட்டு வரும், "பசுமை படை' திட்டம், தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

கேரளாவில், விவசாய கூலித் தொழிலாளர்கள் பிரச்னையால், தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு, பலர் தள்ளப்பட்டனர். இந்நிலையில், கேரள வேளாண்மைத் துறை பேராசிரியர் மற்றும் விவசாய விஞ்ஞானி ஜெயக்குமார் என்பவர், அங்குள்ள விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, "பசுமை படை' என்ற இயக்கத்தை, 2000ம் ஆண்டில் ஆரம்பித்தார்.இதையடுத்து, அங்குள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும், 82 லட்சம் ரூபாய் நிதியை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தி, நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்து, அரசு அதிகாரிகள், பசுமை படையிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.

இந்த பசுமை படையினருக்கு, ஒரு போன் செய்தால் போதும், விதைப்பது, அறுவடை செய்வது, மூட்டையை குடோனில் அடுக்கி வைப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கின்றனர். ஒரு ஏக்கருக்கு, 12 ஆயிரம் ரூபாய் என, விலை நிர்ணயம் செய்துள்ளனர்.இந்த வளர்ச்சியால், முன்பிருந்த நிலையை விட, கேரளாவில் தற்போது விவசாயப் பரப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்திலும் "பசுமை படை': தமிழகத்தில் தற்போது, விவசாய விளைநிலங்கள், பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யக் கூட, விவசாயிகள் போராடி வருகின்றனர்.ஆகையால், கேரளாவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும், "பசுமை படை' திட்டத்தை, தமிழகத்தில், தஞ்சாவூரில், கடந்த 18ம் தேதி, வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார்.இத்திட்டம் மூலம், களை எடுக்கும் கருவி முதல், பல்வேறு நவீன இயந்திரங்களை, தமிழக விவசாய தொழில்நுட்பப் பிரிவில் அறிமுகப்பபடுத்தியுள்ளனர். இக்கருவிகள், 50 பேர் செய்யும் வேலையை, ஒரு நபரே செய்து முடிக்கும் அளவுக்கு திறன் கொண்டவை.

பற்றாக்குறையை தவிர்க்க... : இதுகுறித்து, வேளாண்மைத் துறையின் ஆணையாளர் மணிவாசன் கூறியதாவது:தமிழகத்தில், விவசாய கூலித் தொழிலாளர்கள் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. இப்பிரச்னையால், பெரும்பாலான விவசாய நிலங்களில், எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி கிடைக்கவில்லை.கேரளாவில், நவீன இயந்திரங்கள் மூலம், விவசாய வேலைகளை கையாண்டு, எளிதாக அவற்றை முடிக்கின்றனர். இதை ஏன் தமிழகத்தில் செய்யக்கூடாது என்ற யோசனையில் தான், தஞ்சாவூரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால், விவசாய கூலிகள் பற்றாக்குறை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.இவ்வாறு மணிவாசன் கூறினார்.
Tags: ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...